Friday, 27 July 2018

குலதெய்வங்கள் என்றால் என்ன

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? 

திண்டுக்கல் மாவட்டம் ,எரியோடு கிராமத்தில் அருள் பாலிக்கும்  ஸ்ரீ  வீருசின்னு ,ஸ்ரீ  பாப்பாத்தி அம்மன்  திருக்கோவில் 

நல்லை அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் 



குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?  ஒரு பார்வை...

குலதெய்வம்... 
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். 

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். 

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்... 
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். 

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். 
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று... 
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்... 

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். 

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. 

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து... 
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு... 
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். 

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

குலதெய்வகோவிலுக்கு உதவுங்கள்

மேட்டுர் அணை வரலாறு

மேட்டுர் அணை வரலாறு :

நமக்கும் நம் தலைமுறைக்கும்
சம்பந்தமே இல்லாத மண்
இது என்று தெரிந்தும் ஒருவர்
தமிழகம் செழிக்கும் வண்ணம்
பிரம்மாண்டமான மேட்டூர்
அணையை கட்டி கொடுத்துச்
சென்றுள்ளார் ராயல்
என்ஜீனியர் கர்னல்
டபுள்யூ.எம்.எல்லீஸ்.

இன்றைக்கு 48 ஆயிரம்
கோடி ரூபாய் கொட்டினால்
கூட கட்டமுடியாத
பிரம்மாண்டத்தை கொண்டுள்ள
இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய்
திட்டத்தில்
கட்டி முடித்துள்ளனர்.

மலைக்க
வைக்கும் மாபெரும் திட்டம்.
யாவரும் வியக்கும் மதி நுட்பம்.
மேட்டூர்
அணையை இதுவரை இரண்டு
முறை மின்னல் தாக்கியது.
இருப்பினும் அணைக்கு எந்த
பாதிப்பும் ஏற்படவில்லை
தமிழகத்தில்
காவிரி கரையோரமாக
நிறைய நிலங்களும், விவசாயம்
செய்யக் கூடிய ஆட்களும்
இருந்தும் போதிய நீர்ப்பாசன
வசதி இல்லாததால் விவசாயம்
சரிவர செய்ய முடியவில்லை.
இதை உணர்ந்த
ஆங்கிலேயே அரசு
காவிரியின்
குறுக்கே அணை கட்ட
முடிவு செய்து இடத்தை
தேடியது. 15 ஆண்டுகள்
கழித்து அன்றைய ஆங்கிலேய
அரசின் சென்னை மாகாண
கவர்னர் ஸ்டான்லி காவிரியின்
குறுக்கே அணைக் கட்ட உத்தரவிட்டார்.

இந்த உத்திரவை போட்ட
கவர்னர் ஸ்டான்லியின்
பெயரால் மேட்டூர்
அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும்
அழைக்கப்படுகிது.
இந்த அணையில் கடல் போல
காட்சியளிக்கும்
அளவுக்கு தண்ணீர்
தேக்கப்பட்டது.
அணையை கட்டிய பொறியாளர்
டபிள்யூ.எம்.எல்லீஸ்
ராயலை மேட்டூர் அணையின்
சிற்பி அன்றும், இன்றும்
புகழப்படுகிறார் இனி என்றும்
புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய
அணைகளில் ஒன்றான இதன்
உச்ச நீர் மட்ட அளவாக 120
அடி வரை நீரைத் தேக்கலாம்.

அதன் பிறகு ஓடிவரும் நீர்
வரத்து யாவும் உபரியாக
அணைக்கட்டில் நிற்காமல்
நிரம்பாமல்
தானாகவே வெளியேறிச்
செல்லும் அற்புதமான
இயற்கையுடன் இணைந்த
கட்டுமானப்பணி, எந்தக்
காலத்திலும்
அணைக்கோ அணை சார்ந்த
கட்டுமான அமைப்புகளுக்கோ
ஒருக்காலும்
ஊறு விளைக்கமுடியாத
தன்மைகளுடன்
அமைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர்
அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934
அணைக் கட்ட ஆன செலவு 4.80 கோடி
அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின் அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு உயரம் 120 அடி
அணையின்
நீர்பிடிப்பு பரப்பளவு 59.25
சசதுர மைல்
2,71,000 ஏக்கர் பாசன
வசதி அடைகிறது.
அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின்
உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு,
திருச்சி, தஞ்சை, திருவாரூர்,
நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப்
பகுதி மாவட்டங்களுக்கு
மேட்டூர் தண்ணீர் போகிறது.
மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன
வசதி பெறுகின்றன.

அது
மட்டுமல்லாமல், மேட்டூர்
அணையை நம்பி 4000 மீனவர்கள்
குடும்பங்களும் உள்ளன.
மேட்டூர்
அணையிலிருந்து வெளியே
வரும் காவேரி அதே பெயரில்
106, கிலோ மீட்டர் தூரம்
செல்கிறது. இதன்
கிளை நதிகளாக கொள்ளிடம்,
பொன்னியாறு,
கல்லணை கால்வாய்,
வெட்டாறு, வெண்ணாறு,
குடமுருட்டி என்ற பெயரில் பல
நதிகளாக 694 கிலோ மீட்டர்
தூரம் செல்கிறது.

இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன
வசதியை கொடுக்கிறது.
இப்படி தமிழகத்தை
நெற்களஞ்சியமாக்கும்
வகையிலும்,பல்வேறு மாவட்ட
மக்களின் தாகம் தீர்க்கும்
வகையிலும் ,கிட்டத்தட்ட
பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள்,
உறவு மறந்தும், உணவும்
தூக்கமும் துறந்தும் மேட்டூர்
அணை என்ற
பிரம்மாண்டத்தை வடிவமைத்து
கட்டிக்கொடுத்த கர்னல்
டபுள்யூ.எம்.எல்லீசை,
அணையும் நம் மனசும்
நிறைந்துள்ள இந்த நேரத்தில்
நினைவு கூர்வோம்..

Thursday, 26 July 2018

தானம், தர்மம் என்கிறார்களே ?

தானம், தர்மம் என்கிறார்களே ?

அப்படியென்றால் என்ன?

இந்த இறை கதையை படியுங்கள்.

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க
பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன்,
அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,

என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.

பரம்பொருளே..

பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.

ஆனால்,

எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.

பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.

சூரியனே...

நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.

புண்ணியக் கணக்கில் சேராது.

ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க,
ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்.

தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்கிறார்.

நாமும் புரிந்துகொள்வோம்.

கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !

சப்த கன்னிமார்கள்

சப்த கன்னிமார்கள் ...

சப்த கன்னிமார்கள் ஸ்லோகம்

சப்தகன்னியரில் முதலாவதாக இருப்பவள் பிராம்மி.

பிராம்மி:தியான சுலோகம்
தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

பிராம்மி: மந்திரம்
ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

பிராம்மி: காயத்ரி மந்திரம்
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

சப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மகேஸ்வரி.

மகேஸ்வரி:தியான சுலோகம்
சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மகேஸ்வரி:மந்திரம்
ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

மகேஸ்வரி: காயத்ரி மந்திரம்
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

சப்தகன்னியரில் மூன்றாவது இருப்பவள் கவுமாரி.

குழந்தைச் செல்வம் வேண்டுவோர் இவளை வழிபட நிச்சயம் குழந்தை பிறக்கும்.

கவுமாரி:தியான சுலோகம்
அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே.

கவுமாரி: மந்திரம்
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

கவுமாரி: காயத்ரி மந்திரம்
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.

சப்த கன்னிகைகளில் நான்காவது இருப்பவள் வைஷ்ணவி.

.இவளை வழிபடுபவர்களுக்கு செல்வவளமும், தங்கமும் குவிந்து கொண்டே இருக்கும்.

வைஷ்ணவி:தியான சுலோகம்
சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

வைஷ்ணவி:மந்திரம்
ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

வைஷ்ணவி:காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

சப்தகன்னியரில் ஐந்தாவதாக இருப்பவள் வராஹி.

இவளை வழிபட்டுவந்தால் பயம் நமக்குப்போகும். எதிரியே இல்லாத நிலையை நமக்கு உருவாக்குபவள்.

வராஹி:தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி:மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

வராஹி:காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

சப்தகன்னிகைகளில் ஆறாவதாக இருப்பவள் இந்திராணி.

இவளை ஒரு ஆண் வழிபட்டுக்கொண்டே இருந்தால், அவனுக்கு மிகச்சிறந்த மனைவி அமைவாள்.
ஒரு பெண் வழிபட்டுக்கொண்டே இருந்தால் அவளுக்கு மிகச்சிறந்த கணவன் அமைவான்.
இதுவே இவளது சிறப்பு.

இந்திராணி:தியான சுலோகம்
அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

இந்திராணி:மந்திரம்
ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

இந்திராணி:காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

சப்தகன்னிகைகளில் ஏழாவதாக இருப்பவள் சாமுண்டி.

இவளது மறுபெயர் பத்திரகாளி. முடியாத பிரச்னைகளை முடித்துவைக்கும் சாமர்த்தியம் உடையவள்.
சப்த கன்னிகைகளில் அதீதமான பலம் கொண்டவள்.

சாமுண்டி:தியான சுலோகம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

சாமுண்டி:மந்திரம்
ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

சாமுண்டி: காயத்ரி மந்திரம்
ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா ?

பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா ?

ஒரு மன்னன் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் அவனுக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆனாலும் அவனின் முன் வினை அவனை தொடர்ந்தது. அதன் பலனாக அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன்னால் சரிவர நாட்டை கவனிக்க முடியாது போகவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான்.

அந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை. அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என சதா நேரமும் புலம்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம், "சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் உயிர் பிரிய மறுக்கிறதே" என அழுதான். முனிவர் அவன் நிலை கண்டு அவனை தேற்றி , "மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?" என்றார்.

மன்னனும் ஆமாம் சுவாமி! தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான். "சரி ,இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்" என்றார் முனிவர். அவர் சொன்னதில் மன்னனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.

சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்."சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே" என்றான் மன்னன். "மன்னா! நானும் வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா... அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொல்லி உணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து" என்றார்.

அதிர்ச்சியடைந்த மன்னன் மறுத்து விட்டான். "எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது. நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது" என சொல்லிவிட்டான். மன்னனுடைய மன உறுதியை கண்டு மகிழ்ந்த பரந்தாமனும் மன்னன் முன் தோன்றி, அவனைப் பாராட்டி, வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார்.

கடவுளின் நாமத்துக்கு தான் எவ்வளவு சக்தி. நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான். இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அவன் அருளுக்கு பாத்திரம் ஆவோம்...
#ஓம்நாமோநாராயணாய...

எளிய பரிகாரங்கள்

20 எளிய பரிகாரங்கள் 

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2. சனிக்கிழமை தோறும் பகவா னுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.

3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

11. கோமாதா பூஜை செய்யலாம்.

12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்த து.

14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

16. உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

17. வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

18. பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.

19. தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

20. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா?

உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா ?

தினந்தோறும் இரவு 7 மணிக்கு இப்படி செய்யுங்கள்!!

⚜ அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது.

⚜ அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால்  புகை போட்டு வாருங்கள்.

இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.

⚜ அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

 உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.

⚜ சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

⚜ சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு  தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்.

⚜ சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.

⚜ சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு  தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.

⚜ சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு  தூபமிட காரியசித்தி உண்டாகும்.

⚜ சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

⚜ சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

⚜ சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

⚜ சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

⚜ சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.

⚜ சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

⚜ சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

⚜ சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு  தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

⚜ மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்தி தீராத செல்வ வளம் கிடைக்கப் பெறுங்கள்.

பூஜை துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது ?

பூஜை துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது ?

#சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...

சங்கல்பம்

சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.

கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.

இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.

“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”

என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும்.

ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.

பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.

“இறைவனின் கட்டளைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.

இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.

அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.

இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,

வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;

இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;

அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;

சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;

சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;

ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;

இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;

மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;

ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;

அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;

பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;

பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;

சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே;

இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;

பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;

பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;

எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;

நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;

ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;

யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;

ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:

மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.

கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;

மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;

அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;

உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;

சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;

இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.

இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1.    நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.

2.    அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

3.    அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.

4.    புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.

5.    காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.

6.    இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான்

இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்

#இரவு_முழுவதும் 
நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்

அரியதோர் ஆன்மீகத் தகவல்

ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்!

அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.

கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம்

” நேரமே உலகம்’.

புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்த ல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்குபிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகி லேயே இது ஒன்று தான்

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந் து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின்முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும்.

கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை
.
காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைகொடு, இதை கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,

 “எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.

செல்லும் வழி:

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும்.

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில்செல்வதே சிறப்பு.

இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.


ஆறுபடை முருகனை தரிசிப்பதன் பயன்

ஆறுபடை முருகனை தரிசிப்பதன் பயன்

1. திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.

2. திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.

3. திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனிì ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.

4. சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

5. திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.

6. பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு.

துர்க்கா - தாயின் அருள்கடாட்சம்

துர்க்கா - தாயின்  அருள்கடாட்சம்  பரிபூரணமாகக் கிடைக்க 

துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சம்பத்துகளும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும்.
அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம். நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.

அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

துர்க்கைக்கு எலுமிச்சம் பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார். அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.

ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம். திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள். தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள். மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள்.

உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள். அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள்.

பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள். தீபாரதனை முடித்து-அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார். அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும்.

பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.


ராகு-கால துர்க்கா-அஷ்டகம்

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகை யீன்றவள் துர்க்கா உமையு மானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்க்கா செபமு மானவள்
அம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்ப மானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உயிருமாவனள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் துர்க்கா எந்தன் உடமை யானவள்
பயிரு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னும் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத்தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவுமானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே

கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

(தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே என்ற நாமம் வரும்போது விரதம் இருப்பவர்கள் நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.)

சுமங்கலி பூஜை

சுமங்கலி  பூஜை   எப்படி   செய்வது ?

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திற்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திற்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.

மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பது கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம்.

#சுமங்கலி பூஜை எப்படி - செய்வது ?

இல்லத்தை தூய்மைப்படுத்தி, மாக்கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும். சுவாமி படங்களுக்கு பூ, தூபம்  போட்டு விளக்கேற்ற வேண்டும்.

சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .
நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .

தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி, வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .

சந்தனம், குங்குமம், மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி, தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.

தனித்தனியாக நமஸ்காரம் செய்து, அவர்களுக்கு புடவை, ரவிக்கை, மஞ்சள், குங்கும சிமிழ், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தட்சனை கொடுக்க வேண்டும்.  இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம். ஆனால்  தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .

பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே, இல்லத்தலைவி சாப்பிட வேண்டும். மீண்டும் ஒரு முறை, வந்த அனைத்து பெண்களையும்  வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.

இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி.

இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே. இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி கணவனுடன் ஆயுள் ஆரோக்யத்தொடு வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

அதுமட்டுமல்ல, இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும்  வகுக்கிறது .

கருப்பசாமி _ வரலாறு

கருப்பசாமி  - வரலாறு





       
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்!

வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல்,

தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும்.

ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள்.

கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில். கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு.

நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம்.

கருப்பசாமியின் மனைவி கருப்பழகி(கருப்பாயி); மகன்- கண்டன்; அண்ணன்-முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை- ராக்காயி. ஐயன் ஐயப்பனும் கருப்பரும்: ஸ்ரீஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத்தாண்டகத் தின் முதல் பாடல் சொல்கிறது.

""மலையாளத் துரையானை என்னுள்ளத்தில்
வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே!""

என்கிறது அந்தப் பாடல் வரி.

கத்தப்பட்டு அருள்மிகு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்....

மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி
மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி.. எனப் போற்றுகின்றன!

பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த்துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்!

பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு எனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது,

மொட்டையக்கோனார் என்பவர் எழுதிய... பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு பாடல்! ஸ்ரீதச மகாவித்யா எனும் நூலாசிரியர் திருவெண்காடு ஏ.கே.முத்துசாமி சாஸ்திரிகள். மகா காளன் என்ற கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிறார்.

பதினெட்டாம்படி கருப்பர்:

சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புராணங்களில் உண்டு.

சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார்,

முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம்

ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள். சரி சாஸ்தாவின் சித்தத்தை ஆணையை நிறைவேற்றும் இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் போற்றுவர். காவல் தெய்வம் கருப்பண்ண சாமி! கண்கண்ட தெய்வமாம் கருப்பர் பூஜைக்குச் சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும்.

பூஜையில் அமர்ந்ததும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம்; நாள் நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்துப் பூஜையைத் தொடங்க வேண்டும், முன்னதாக சத்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமி தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம்,

ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ எனக் கூறி வழிபடலாம் நிறைவாக நைவேத்திய சமர்ப்பணம்.

இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ஸ்ரீமந் நாராயணனும் சிவபெருமானும் பரம்பொருள். சுத்த தெய்வம். சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது. மது-மாமிசம் அனைத்தும் காமியார்த்தத்தில் உள்ளவை. துன்பம் கொடுப்பவை.

உதாரணமாக ஓர் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ வெட்டினால் அந்த உடலிலிருந்து உயிர் பிரிகிறது. எந்த அளவுக்கு துன்பப்பட்டு அந்த ஜீவன் பிரிகிறதோ, அதைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு துன்பம் கொலை செய்தவனுக்கு வந்து சேரும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

கருப்பணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள்-சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்,  மனதார தரிசிக்கலாம்.

பசுவும் புண்ணியங்களும்

பசுவும் புண்ணியங்களும்

🐂 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

🐂பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால்  பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்
.
🐂பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

🐂 பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.

🐂பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது.  இது மிக புண்ணியமான காலமாகும்.

🐂பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது  8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

🐂" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

🐂பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

🐂மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் ,  எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

🐂ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை.  அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

🐂உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.


🐂கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்.!!

Wednesday, 25 July 2018

குங்குமம் இடுதல்

#குங்குமம் 
#லட்சுமி கடாட்சம் மிக்கது. 

பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள்.

இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.

வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.

இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள்.

இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில்இரும்புச் சத்தாக மாறிவிடும்.

படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.

மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி.

அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.


மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்,!!

மாங்கல்ய பலம் தரும் ஆடி வெள்ளி விரதம்

மாங்கல்ய பலம் தரும் ஆடி வெள்ளி விரதம்

ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக் கிழமை . பொதுவாகவே வெள்ளிக் கிழமைகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அதிலும் ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி அம்மன் வழிபாடு செய்கின்றனர். அந்த விதத்தில் இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை.

ஆடி மாதமே அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. எந்த விதத்திலும் பக்திக்கு இடையூறு இருக்க கூடாது என்றே ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள் இடம்பெறுவதில்லை. ஆடி முதல் வெள்ளியான இன்று மட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என பெண்கள் வீடுகளிலும் கோயில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம்.

மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். அந்த வகையில் இந்த மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. மகாலட்சுமிக்கு உகந்த இந்த விரதத்தை வீடுகளில் பூஜைகள் செய்து பெண்கள் அனுசரிப்பார்கள்.

சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது.

புற்றுக்கு பால் தெளித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, ஆகியவற்றை படைத்து பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வாடிக்கை.

கூழ்வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல், தீக்குண்டம் இறங்குதல் என மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகிறது.

 அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் பக்தி மணம் கமழும் மாதமாக போற்றப்படுகிறது.

பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய முக்கிய 30 குறிப்புகள்


பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய முக்கிய 30 குறிப்புகள்

நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செய்ய வேண்டியனவும், செய்ய கூடாதனவும் யாவை என்று பார்ப்போம்.

1. தினசரி காலையும், மாலையும் தூய (நல்ல சிந்தனையுடன்) மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும் .

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது தான் துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. 9. அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் ( மலர்களை) சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் ( வாசற்காள்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை ( 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் இது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்) நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் ( பிரணவம்) என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23. ருத்ரம், சமகம் கந்த சஷ்டி கவசம், சிவபுராணம், கோளாறு பதிகம், திருநீற்றுப் பதிகம், போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும். கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.


30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

தாழம்பூ அலங்காரத்தில் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்......

தாழம்பூ அலங்காரத்தில் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்......





குருப்பெயர்ச்சி 2018

குருப்பெயர்ச்சி 2018 - விருச்சிக ராசிக்கு மாறும் குரு பகவான் எந்த ராசிக்கு என்ன பலன்கள் ?

 குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம். குருப்பெயர்ச்சிக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் போதே பலன்கள் எழுத இப்போதே என்ன அவசரம் என்று யோசிக்க வேண்டாம் தீபாவளிக்கு போக இப்போதே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போல குரு பெயர்ச்சி பலன்களையும் படித்து முன்னதாகவே பரிகார தலங்களுக்கு செல்ல திட்டமிடுங்கள். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களே அதிக பலனடையும்.

குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்கும் பொருள் சேமிப்பிற்கும் காரணகர்த்தா. குரு பகவான் மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார். புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார். இந்த குரு பெயர்ச்சி ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனை தருகிறது. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும்.

மேஷம் 
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாகும். வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள் நீங்கள். வீர தீரம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். அஷ்டமத்தில் குரு அவ்வளவாக நல்லதில்லை. ஆனாலும் குரு பகவான் பார்வை ராசிக்கு 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் பல நன்மைகள் நடக்கும். தனவரவு இருக்கும், சுக சந்தோஷங்கள் அதிகரிக்கும். சுப விரையங்கள் அதிகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது பேச நேரம் ஒதுக்குங்கள் சண்டைகளை தவிர்க்கலாம்.சாப்பாட்டு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிறு கோளாறுகளையும், நோய்களையும் தவிர்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யலாம்

ரிஷபம் 
சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து நடக்க கூடியவர்களாகவும், வசீகரப் பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்களாகவும் இருப்பிர்கள். நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே.... உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கும் குருபகவான் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம். கல்யாண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும் மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். இது காதல் மலரக் கூடிய ஒரு காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் ஆகும். பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும். நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும்.

மிதுனம்
புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாகவும்,சகிப்பு தன்மையும்,பொறுமையும் உடையவர்களாகவும் எல்லா காரியங்களையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான அதிபதியான குரு ராசிக்கு 6வது வீட்டில் அமர இருக்கிறார். 6 ஆம் இடம் சுப ஸ்தானம் இல்லை. குரு பகவான் 10,12 ஆம் இடம் மற்றும் 2 ஆம் இட தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். திருமண வாய்ப்புகள் தாமதப்படும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபட நன்மைகள் அதிகம் நடக்கும்.

கடகம்
சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் நீங்கள் உங்கள் ராசிநாதன் சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறையாகவும், பதினைந்து நாட்கள் தேய்பிறையாகவும் உலவி வருவார். குருபகவான் இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உள்ள குருபகவான் அக்டோபர் மாதம் முதல் 5வது வீட்டிற்கு செல்கிறார். குருபகவான் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார் குருபகவான். காதல் கனியும் காலம், திருமண வாய்ப்புகளும் கைகூடி வரும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வழிபடலாம்.

சிம்மம்
சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் அக்டோபர் மாதம் முதல் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போகிறார். குருபகவான் ராசிக்கு 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடத்தையும் பார்வையிடுகிறார். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். காதல், திருமண விசயங்களில் அவசரப்பட வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம். தென்திட்டையில் எழுந்தருளும் குருபகவானை வணங்க நல்லதே நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும்.

கன்னி
புதன் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட புத்திசாலித்தனம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர உள்ளதால் சிறு சிறு பயணங்கள் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு 3வது இடத்திற்கு செல்வதால் வார்த்தைகளில் கவனம் தேவை. குரு பகவான் ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும், கடன் தொகை வசூலாகும்.

துலாம்
அன்பும், காதல் உணர்வும் கொண்ட துலாம் ராசி நேயர்களே... இது நாள் வரை உங்கள் ராசியில் இருந்த குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்திற்கு செல்கிறார். குரு பகவான் ராசிக்கு 6வது இடம் 8வது இடம், 10வது இடத்தை பார்வையிடுகிறார். குரு பெயர்ச்சியினால் வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம், சிலருக்கு பணி செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும், பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாழக்கிழமையன்று ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம்.

விருச்சிகம்
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே. இதுநாள் வரை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்த குருபகவான், அக்டோபர் மாதம் முதல் ராசிக்குள் வந்து அமர்கிறார். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். குரு பகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம். குரு 5ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5மிடத்தை பார்ப்பபதால் திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகளின் மேல் படிப்பிற்காக செலவுகள் அதிகரிக்கும். தாய் வழியில் தன வரவு வரும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7மிடத்தை பார்ப்பதால் வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தனுசு
அறிவாற்றலும், திறமையும் கொண்ட தனுசு ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்க்கிறார். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்கள் கை கூடுவதில்லை கொஞ்சம் ஒத்திப்போடவும். அவ்வப்போது உடல் களைப்பு ஏற்படும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடவும். உங்கள் ராசிக்கு 4 ம் வீடு பூமி வீடு,வாகனம் சுகம் கல்வி,தாய் ஆகிய ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அதன் அடிப்படையில் யோகங்கள் வரும்.சகல காரியங்கள் சித்தி பெறும். உங்கள் ராசிக்கு 6ம் பாவத்தை குரு பார்ப்பாதல் கடன் சுமை குறையும்.நோய் நொடி நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு 8ம் பாவத்தை குரு பார்ப்பதல் வழக்கு வெற்றிகள் சாதகமாகும். பயம் நீங்கும்.எதிர்பாராத வகையில் பண வரவு வரும். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும். குருபகவானை சரணடைய நல்லதே நடக்கும்.

மகரம்
உங்கள் ராசிக்கு 10ம் பாவத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானமான சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளார். 11ம் பாவம் என்பது மூத்த சகோதரர்கள், வித்தை, லாபம், நட்பு, மன ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். உங்கள் ராசிக்கு 11ம் பாவத்தில் குரு வரும் பொழுது முழுமையான யோகத்தைச் செய்யும் என்பது பழமையான ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கு 3ம் பாவத்தை குரு 5ம் பார்வையாக பார்ப்பாதல் வீரம்,போகம் துணிவு துணைவர் பலம், ஆயுள்பலம், எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும்.

கும்பம்
ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 2 ஆம் இடம் 4 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். பத்தாமிடத்து குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல். கடந்த காலத்தில் குரு 9ல் நல்ல இடத்திலிருந்து நன்மைகளை அடைந்தவர்கள் பத்தில் குரு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையையும் உருவாகும். குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான வாக்கு வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்க்க போவதால் சொன்ன சொல்லை காப்பாற்றலாம். குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும்.

மீனம்
இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு இப்பொழுது ராசிக்கு 9ம் இடத்திற்கு மாற இருக்கிறார். உங்கள் ராசி நாதனான குருவே உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும் நல்லது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பார்கள். உங்கள் ராசி நாதன் குரு 5ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க போவதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு.பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வதும், திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகப் பெருமானை வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்